இன்று மாலை 7 மணியளவில் அஹமதாபாத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த மூன்று டி-20 போட்டியில் இரு போட்டியில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியில் இந்தியா அணியும் வென்றுள்ளனர். அதனால் இனி வரும் போட்டிகளில் இந்தியா அணி நிச்சியமாக வெற்றிபெற வேண்டும்.
மொத்த 5 டி-20 போட்டிகளில் இன்னும் இரு போட்டிகள் மட்டுமே உள்ளது. இந்தியா அணி இன்னும் நடக்க இருக்கின்ற இரு போட்டிகளும் நிச்சியமாக இந்தியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே டி-20கான போட்டிக்கான கோப்பையை வெல்ல முடியும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டிகள் வென்றால் போதும்.
கடந்த மூன்று போட்டியிலும் இந்தியா அணியின் வீரர் கே.எல்.ராகுல் வெறும் ஒரு ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதனால் அவரை அணியில் இருந்து நீக்கி வேறு வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் பல கருத்துக்களை கூறினார். இருந்தாலும் மூன்றாவது போட்டி முடிந்த பின்பு கோலி அளித்த பேட்டியில்;
ராகுலை நிச்சியமாக அணியில் இருந்து நீக்க முடியாது. ஏனென்றால் இதுவரை அவரை அணியில் இருந்துள்ளார் , இனி வரும் இரு போட்டிகளிலும் அவரை நீக்க முடியாது. அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார். அதனால் ராகுல் அணியில் இருப்பர் என்று இந்தியா அணியின் கேப்டன் கூறியுள்ளார்.
இந்தியா அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ; இதுவரை நடந்த போட்டியில் ராகுல் வெறும் ஒரு ரன்களை அடித்துள்ளார். அவரை முதல் இடத்துக்கு பதிலாக 4வது இடத்தில் இறங்கினால் நல்ல ரன்களை எடுக்க அதிகம் வாய்ப்பு இருக்கும். இதே மாதிரி விராட் கோலியை தோனி இடத்தை மாற்றி இறக்கியுள்ளார்.
அதே மாதிரி அணியில் சிறிது மற்றம் நிகழ்ந்தால் நிச்சியம் மாற்றம் நிகழும் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அணியில் 5 பௌலர்களுக்கு பதிலாக பேட்ஸ்மேன் அதிகமாக இருந்தால் அணியில் நிச்சயமாக மாற்றம் நிகழும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.