சென்னைக்கு டாட்டா காட்டிய தோனி ; சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதற்கு காரணம் கரோனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் இந்தியாவில் ஐபிஎல் போட்டி வேண்டாம் என்றும். அதனால் ஐக்கிய அரபு நாட்டில் எந்த ரசிகர்களும் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது, அதன்விளைவாக 2020 ஆம் ஐபிஎல் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் மகேந்திர சிங் தோனியும் அவரது ஓய்வு பற்றி தகவலை வெளியிட்டார் அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் சோகத்தில் மூழ்கினார். ஆனால் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் அவரை பார்க்க முடியும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதுவும் இந்த வருடம் இந்தியாவில் நடக்க போவதால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளார். ஆனால் கொரோனா இந்தியாவில் அதிகம் உள்ளதால் ஐபிஎல் போட்டிகளுக்கு சில மைதானங்கள் மட்டுமே போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளனர்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சில கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால் ஒருவேளை இது அவருக்கு கடைசி ஐபிஎல் போட்டியாக இருந்தால் அது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால் ஐபிஎல் அணிகள் யாரும் அவரவர் ஹோம் மைதானத்தில் விளையாட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது. உதாரணத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னையில் ஒரு போட்டிகள் கூட இல்லை. அதேமாதிரி தான் அணைத்து அணிகளுக்கும்.

ஒருவேளை இந்த ஆண்டு அவருக்கு கடைசி ஐபிஎலாக இருக்கும் பட்சத்தில் எப்படி அவரை வேறு ஒரு மைதானத்தில் இருந்து அவரை வழிஅனுப்ப முடியும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். சென்னை மைதானத்தில் வைத்து மட்டுமே அவரை வழியனுப்ப முடியும் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி 9ஆம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. மீண்டும் டோனியை கிரிக்கெட் போட்டியில் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.