ஐபிஎல் பந்துவீச்சாளர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார் !! ஐயோ இவரா… சோகத்தில் ரசிகர்கள்….

ஐபிஎல் பந்துவீச்சாளர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்

ஐபிஎல் 2020 :போட்டியை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில போட்டிகளில் நடக்கும்போது வீரர்களுக்கு அடிபடுவது சாதாரணம். சிலருக்கு சின்ன காயத்திலும் சிலருக்கு விளையாட முடியாத அளவுக்கு காயங்கள் ஏற்படும். 

அந்த வகையில் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கையில் அடிபட்டதால் அவரால் இனி இந்த ஐபிஎல் 2020 போட்டிகளில் விளையாடமாட்டார் என்று டெல்லி கேப்பிடல் அணி கூறியுள்ளது. இவர் 2008,2009,2010,2015 மற்றும் இப்பொழுது டெல்லி கேப்பிடல் அணி விளையாடி வருகிறார் அமித் மிஸ்ரா. 

கடந்த சனிக்கிழமை அன்று தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர் முடிவில் 228 ரன்கள் எடுத்துள்ளனர். 

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தொடக்க வீரரான சுமன் கில்  28 ரன்கள் எடுத்தும் மற்றும் சுனில் நரேன் 3 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் இறங்கிய நித்திஷ் ராணா 35 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி வீரரான ரசல் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பல ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தன.ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே 13 ரன்கள் எடுத்த ரசல் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் , டெல்லி கேப்பிடல் அணியின் பவுலர் அமித் மிஸ்ரா முதல் ஓவரில் 7 ரன்கள் மற்றும் 1 விக்கெட் அமித் மிஸ்ரா, இரண்டாவது ஓவரில் அவர் கையில் அடிபட்டது. இப்பொழுது சிறந்த சுழல்பந்து வீச்சாளர் பவுலர் ஆன அமித் மிஸ்ராவால் வருகிற போட்டிகளில் விளையாட முடியாது. இதனை கேட்ட டெல்லி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் முழ்கியுள்ளனர்.

ஏனென்றால் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு டெல்லி அணி இந்த ஆண்டு ஐபிஎல் 2020 இல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இதுவரை 5 போட்டிகள் விளையாடிய டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் 2020 புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது டெல்லி அணி.