சிஎஸ்கே அணியில் இன்றைய போட்டியில் விளையாடும் புதிய வீரர் யார் அவர்…… ?
இந்த ஆண்டு ட்ரீம்11 ஐபிஎல் போட்டி சிறப்பாக நடைபெற்ற வருகிறது. இதுவரை 20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இன்று நடைபெற உள்ள 21வது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் மோத உள்ளன.இந்த போட்டி அபு தாபியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.
கொல்கத்தா அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 4வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 5 போட்டிகள் விளையாடி 2போட்டியில் வெற்றி பெற்று 5வது இடத்தில் உள்ளது. இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் 23 முறைமோதியுள்ளது.
அதில் 13 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 8 போட்டிகள் மட்டும் தான் கொல்கத்தா அணி வென்றுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா எதிரான போட்டியில் இம்ரான் தாகிர் 4 விக்கெட் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிஎஸ்கே அணியில் இன்றைய போட்டியில் விளையாடும் புதிய வீரர் யார் அவர்…… ?
ஐபிஎல் 2020 ஆரம்பித்த முதல் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சாம் குரான் பதிலாக இம்ரான் தாகிர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்க படுகிறது.
கடந்த ஐபிஎல் 2020 போட்டியில் அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார் இம்ரான் தாகிர். 17 போட்டிகள் விளையாடி அதில் அதிகபட்சமாக 26 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இம்ரான் தாகிர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதியாக பஞ்சாப் அணியை எதிர் கொண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றனர். முதலில் இறங்கும் டுபலஸிஸ் மற்றும் வாட்சன் சிறப்பாக பேட்டிங் செய்தலே போதும். சென்னை அணிக்கு நல்ல ஒரு ரன்கள் கூடும்.
அதுமட்டுமின்றி சாம் குரான் தோனிக்கு பிறகு பேட்டிங் செய்வதனால் இந்த முறை அவருக்கு பதிலாக இம்ரான் தாகிர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்க படுகிறது.