“வீடியோ” வயதை வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி!!!

0

2008 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நல்ல ஒரு வரவேற்பு பெற்று ஐபிஎல் போட்டி நடந்து இருக்கின்றன. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கும். கொரோனா வைரஸ் காரணமாக வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் 20 20 இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2020: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடித்த ராகுல் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை அணியை கலங்க வைத்தனர்.

17-வது ஓவரில் ஷர்துல் தாகூர் வீசிய முதல் பந்தில் நிக்கோலஸ் பூரன் அவுட் ஆகி விட்டார். 17-வது ஓவரில் இரண்டாவது பந்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் எதிர்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டின் நுனியில் பட்டு பின்னே சென்ற பந்தை சிஎஸ்கே கேப்டன் தோனி அவர்கள் ஒற்றைக் கையில் பிடித்து விக்கெட் எடுத்தார்.

அதுமட்டுமின்றி இந்த விக்கெட் தோனியின் 100வது கேட்ச் ஆகும். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை வயது வைத்து கிண்டல் செய்பவர்களுக்கு இந்த கேட்ச் தக்க பதிலடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தோனியின் அசாதாரணமான ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீடியோ;;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here