பல நாட்கள் கழித்து மீண்டும் இந்திய அணியின் பெற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ; இவர் தான் இந்திய அணியின் நம்பிக்கையே ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளனர். அதனை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணியின் விவரம் :

பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் காரே, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், உஸ்மான் கவாஜா, மார்ன்ஸ் லபுஸ்சாக்னே, நாதன் லியொன், மிச்சேல் மார்ஷ், டோட் மர்பி, ஸ்டீவன் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ஸ்ரீகர் பாரத், ஷர்டுல் தாகூர், முகமத் ஷமி, முகமத் சிராஜ், ஜெயதேவ் உனட்கட், உமேஷ் யாதவ் மற்றும் இஷான் கிஷான்.

கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முன்னேறியது. ஆனால் இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வி பெற்றது இந்திய.

அதனை தொடர்ந்து இந்த முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய. இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ?

பலமாக மாறிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் :

எப்பொழுதும் ஒரு ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அதிக ரன்களை ஒரு அணியால் அடிக்க முடியும். இருப்பினும் இந்த முறை இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் மட்டுமின்றி மிடில் ஆர்டரிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். ஆமாம், அதில் விராட்கோலி, ரஹானே, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி, கடந்த ஒரு ஆண்டுகளாக எந்த விதமான டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வந்தார் ரஹானே. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரில் அதிரடியாக விளையாடிய காரணத்தால் மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம்கிடைத்துள்ளது.

ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ரஹானே, ரவீந்தர ஜடேஜா, பாரத் போன்ற பேட்ஸ்மேன்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here