போட்டியில் வென்ற பிறகு ஜடேஜா , தோனி செய்த செயலை பாருங்க ; இதற்கு பெயர் தான் சண்டையா ?

0
Advertisement

குஜராத் டைட்டன்ஸ் வ்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் : நேற்று ஐபிஎல் 2023 போட்டிக்கான இறுதி போட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடினர்.

இந்த போட்டி நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக நேற்று இரவு அதே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் டார்கெட் செட் செய்ய களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

தொடக்க வீரரான சுப்மன் கில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இருப்பினும் சாய் சுதர்சன் மற்றும் சக இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிலும் சாய் சுதர்சன் 96, சக 54 ரன்களை விளாசினர். அதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 214 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு த்ரில் வெற்றி காத்திருந்தது. ஆமாம், முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்தது. அதனால் வேறு வழியில்லாமல் 15 ஓவருக்கு போட்டியை மாற்றினர். அதுமட்டுமின்றி, 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது சென்னை.

ரூட்டுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ஷிவம் துபே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்த காரணத்தால் சென்னை அணி இறுதி பந்து வரை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 171 ரன்களை அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றது சென்னை. அதுமட்டுமின்றி, ஐந்தாவது முறையாகவும் கோப்பையை கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனிக்கு இடையே இருக்கும் நட்பு :

லீக் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இறுதியாக விளையாடிய. அதில் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவியது. அது உண்மை தான் என்று பலர் நினைத்தனர். அதுமட்டுமின்றி, முதல் QUALIFIER சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்ற பிறகு CSK அணியின் CEO காசி விஸ்வநாதனிடம் ஜடேஜா கோபமாக பேசும் புகைப்படம் இணையத்தை கலக்கியது.

இதெல்லாம் உண்மையா ?

நிச்சியமாக இது தவறான தகவல் என்பது நேற்று நடந்த இறுதி போட்டியில் நன்கு தெரிந்தது. ஆமாம், இறுதி ஓவரில் 13 ரன்களை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது சென்னை. இறுதி இரு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அதில் ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதி பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா சென்னை அணி வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மைதானத்தை சுற்றி வந்து தோனியிடம் சென்று கட்டிப்பிடித்தார். ஜடேஜாவை தூக்கி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் தல தோனி. அதன் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. போட்டிகளில் விளையாடும் போது சின்ன சின்ன சண்டை வருவது சாதாரணம் தான். இதில் இருந்து நன்கு தெரிந்தது தோனி மட்டும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் எந்த விதமான சண்டையும் இல்லையென்று.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here