தோனி நினைத்ததை செய்ய ஜடேஜா உதவி செய்துள்ளார் ; அடுத்த வருடம் தான் எல்லாம் முடிவிற்கு வர போகிறது ; CSK ரசிகர்களுக்கு முக்கியமான தருணம் ;

0

ஐபிஎல் 2023 : கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கியது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். ஆமாம், அதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

இதுவரை அதிகமுறை ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறிய அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதிலும் ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்னை அணியில் விளையாடுவார் தோனி ?

42 வயதான தோனி இந்த ஆண்டு ஐபிஎல் 2023 முடிந்த உடன் ஓய்வை அறிவிப்பார் என்று பலர் நினைத்தனர். ஆனால் தோனி அன்றே கூறினார் ” நான் நிச்சியமாக சென்னையில் விளையாடிய பிறகு தான் ஓய்வை அறிவிப்பேன் என்று.” அதற்கு ஏற்ப இந்த ஆண்டு கோப்பையை கையில் கொடுத்த பிறகு ஓய்வை பற்றி தோனியிடன் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தோனி, நிச்சியமாக கோப்பையை வென்ற கையுடன் ஓய்வை அறிவித்தால் சிறப்பாக தான் இருக்கும். இருப்பினும் எனக்காக பல ரசிகர்கள் நான் என்ன செய்ய போகிறேன் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதனால், மீண்டும் ஒரு ஆண்டு நான் ஐபிஎல் போட்டியில் விளையாட போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆமாம், எந்த அணி கோப்பையை வெல்கிறதோ, அந்த அணியின் ஹாம் மைதானத்தில் தான் இறுதி போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு சென்னை அணி வென்றதால் அடுத்த ஆண்டு இறுதி சென்னையில் தான் நடைபெற இருக்கிறது. அதனால் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிவரை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆமாம், ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் தீரில் வெற்றியை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதனால் சென்னை அணியால் கோப்பையை வெல்ல முடிந்தது. அதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி நிச்சியமாக சென்னையில் ஓய்வை அறிவிப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தோனிக்கு ஓய்வை அறிவிக்கும் நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை வெல்லுமா ?? இல்லையா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here