தோனிக்கு பிறகு இவங்க நான்கு வீரர்கள் தான் அணியை வழிநடத்த போகிறார்கள் ; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் ;

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் அதிக அளவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த விளையாட்டாக மாறியது தான் உண்மை. அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்தம் 14 சீசன் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் 15வது சீசன் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றியை கைப்பற்றிய அணி தான் சென்னை அணி.

இதனை ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் வழிநடத்தி வருகிறார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்த பிசிசிஐ, மெகா ஏலத்தையும் நடத்த முடிவு செய்தனர். அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறியது. அதனால் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் , ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி மற்றும் மொயின் அலி போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.

அதில் சுரேஷ் ரெய்னா இல்லாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்படி தான் நடக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏனென்றால் சுரேஷ் ரெய்னா 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. பின்னர் 2021ஆம் ஆண்டு போட்டியில் எதிர்பார்த்த அளவிற்கு அவரது விளையாட்டு இல்லை என்பது தான் உண்மை.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில் ; ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா மற்றும் ப்ராவோ போன்ற வீரர்கள் தான் தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த முடியும். இவங்க நான்கு வீரர்களும் அதனை சரியாக செய்ய கூடியவர்கள் தான் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனிக்கு யார் வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!