தோனி இந்த முறை பினிஷர் இல்லை ; அவருக்கு இந்த இடம் சரியாக இருக்கும் ; முன்னாள் வீரர் உறுதி ; முழு விவரம் இதோ ;

வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் ஐபிஎல் 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகளை கொண்டு விளையாடி வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி, இப்பொழுது அனைவருக்கும் இருக்கும் ஒரே கேள்வி தோனி எப்பொழுது தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்பது தான்.

ஏனென்றால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் தோனி கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிப்பதில்லை என்பது தான் உண்மை. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் முதல் ப்ளே – ஆஃப் சுற்றில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை.

அதில் தோனி 6 பந்தில் 18 ரன்களை அடித்துள்ளார் தோனி. என்னதான் தோனி பேட்டிங் செய்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, தோனி ப்ளேயிங் 11ல் இருக்க வேண்டும், கீப்பிங் செய்ய வேண்டும் என்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஏனென்றால் தோனியை சரியாக கேப்டன் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் எப்பொழுது யாரை களமிறங்க வேண்டும், எந்த நேரத்தில் யார் பவுலிங் செய்ய வேண்டும் என்று தோனி நன்கு தெரியும். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ரீடிண்டர் சோதி அளித்த பேட்டியில் ; தோனி வருகின்ற ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் இந்த இடத்தில் பேட்டிங் செய்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் .

இதனை பற்றி மேலும் பேசிய அவர் ; ” சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் தோனி, இருப்பினும் தோனி இப்பொழுது அவரால் நிச்சியமாக பினிஷர் ஆக பேட்டிங் செய்ய முடியாது. அதனால் இனிவரும் போட்டிகளில் தோனி டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும்.

தோனி 10 அல்லது 11வது ஓவரில் களமிறங்கினால் நிச்சயமாக அவரால் ரன்களை அடிக்க முடியும். சென்னை அணியின் முக்கியமான வீரராக தோனி இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சோதி.

தோனி கடந்த 2020ஆம் ஐபிஎல் போட்டியில் 200 ரன்களை அடித்துள்ளார். அதே கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் 114 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ரசிகர்களே நெனக்கி சொல்லுங்க..! தோனி கேப்டனாக இருக்க வேண்டுமா ?? அல்லது பேட்டிங் நிச்சியமாக செய்ய வேண்டுமா ??

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே COMMENTS பண்ணுங்க…!