சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி ; இனி இவர் தான் கேப்டன் ; சிஎஸ்கே அணி உறுதி ;

ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதாவது இன்னும் இரு நாட்களில் போட்டிகளை நடத்த போகிறது பிசிசிஐ. இந்த முறை இரு புதிய அணிகளை கொண்டு மொத்தம் 10 அணிகள் இருப்பதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சயமாக பஞ்சம் இருக்காது.

இன்னும் இரு நாட்கள் இருக்கும் நேரத்தில் சென்னை அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகினார் தோனி. கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி எப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவார் என்று பல கேள்விகள் எழுந்தன.

இப்பொழுது சற்று முன் வெளியான தகவலின் படி தோனி தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்..! தோனியை இனிமேல் எந்த போட்டியிலும் கேப்டனாக பார்க்கவே முடியாது.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ( 2010,2011,2018 மற்றும் 2021) போன்ற ஆண்டுகளில் சாம்பியன் படத்தை வென்றுள்ளது. பின்னர் சென்னை அணி அதிகபட்சமாக 64.83 சதவீதத்தில் வெற்றிகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது எதிர்பார்த்த ஒன்று தான். இனிவரும் போட்டிகளில் தோனி ஒரு ப்ளேயர் ஆக உலாவர போகிறார். ஆனால் நிச்சியமாக ரவீந்திர ஜடேஜாவுக்கு பக்கபலமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரவீந்திர ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, இப்பொழுது இந்திய அணியின் முக்கியமான ஆல் -ரவுண்டராக திகழும் ஜடேஜா சென்னை அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது. வருகின்ற சனிக்கிழமை முதல போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர்

இனிவரும் போட்டிகளில் மகேந்திர சிங் தோனியின் நடவடிக்கை அணியில் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். சென்னை ரசிகர்கள் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!