இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் கேப்டன் இவர் தான் ; உற்சாகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ; முழு விவரம் இதோ…!

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் விளையாட போகிறது இந்திய அணி. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

சமீபத்தில் 20 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. ஆனால் இப்பொழுது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட போவதாகவும் பிசிசிஐ, அதனால் உடனடியாக இந்திய அணியின் பி பிரிவு வீரர்கள் எதிர்கொள்ளவர்கள் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் யாரும் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாது என்பதே அர்த்தம். அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற உள்ளனர்.

அதனால் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலு குறிப்பாக இந்த மூன்று வீரர்களுக்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதில் முதலில்;

ஷிகர் தவான் ;

இந்த ஆண்டு ஐபிஎல் 2021, இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய தவான் 380 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 92 ரன்களை எடுத்துள்ளார். அதிகம் அனுபவம் உள்ள வீரர் தவான், அதிலும் ஷார்ட் போர்மட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தைவெளிப்படுத்தி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமின்றி சில போட்டிகளில் தவான் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எல்.ராகுல் :

கே.எல்.ராகுல் ஷார்ட் போர்மட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை அவ்வவ்போது ஏதாவது போட்டிகளில் நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார். கண்டிப்பாக கே.எல். ராகுல் கேப்டனாக இருக்க அதிகம் தகுதி உள்ளது. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.

பிட்னெஸ் டெஸ்ட் பாஸ் செய்தால் மட்டும்தான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடியும். ஆனால் அது மிகவும் கடினம் தான் ஏனென்றால் சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரேயாஸ் ஐயர் :

கடந்த இரு ஆண்டுகளாக ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் அதிரடியாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகளாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் பலமாக அடிபட்டுவிட்டது.

அதனால் அவரால் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஆக இடம்பெற்றால் நிச்சயாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது.