உன்னோட விக்கெட் என்னோட கையில் தான் ; தொடர்ந்து ஒரே வீரரின் விக்கெட்டை கைப்பற்றிக்கொண்டு வரும் அர்ஷதீப் சிங் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டியில் குரூப் 1ல் நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

குரூப் 2 பிரிவில் தென்னாபிரிக்கா அணி முதல் இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இன்னும் 10 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் அணிகள் யார் யார் என்ற எதிர்பார்த்து ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்திய அணியின் பலம் :

கடந்த சில ஆண்டுகளாவே இந்திய அணியின் விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி, திறமை வாய்ந்த இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒரு வீரராக திகழ்கிறார் அர்ஷதீப் சிங்.

இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுது விளையாடும் வீரர்களின் அர்ஷதீப் சிங் மட்டும் தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இந்தியா அணியின் முன்னாள் பவுலரான சாஹீர் கானுக்கு பிறகு இவர் தான் இடது கை பந்து வீச்சாளர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காரணத்தாலும் இடது கை பந்து வீச்சாளர் என்ற காரணத்தாலும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அர்ஷதீப் சிங் தொடர்ந்து இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் விளையாடி கொண்டு வருகிறார். அதிலும் இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் அர்ஷதீப் சிங்-ன் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதேபோல சிறப்பாக பவுலிங் செய்தால் நிச்சியமாக எதிர்காலத்தில் இந்திய அணியின் அசைக்கமுடியாத வீரராக அர்ஷதீப் சிங் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்று, அர்ஷதீப் சிங் ஒரு வீரரின் விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்ற கொண்டே வருகிறார்.

ஆமாம், இரு தினங்களுக்கு முன்பு தான் இந்திய மற்றும் தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடைபெற்றது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது தென்னாபிரிக்கா அணி. அதில் அர்ஷதீப் சிங் 4 ஓவர் பவுலிங் செய்து 25 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அதில் தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த ரிலே ரோசசௌவ் விக்கெட்டை தொடர்ந்து அர்ஷதீப் சிங் தான் கைப்பற்றி வருகிறார். அதாவது தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே போட்டிகளில் கடந்த 5 போட்டிகளில் மூன்று முறை ரோசசௌவ் விக்கெட்டை அர்ஷதீப் சிங் தான் கைப்பற்றி கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here