இவரை வெளியேற்றிவிட்டு ரிஷாப் பண்ட் -க்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுங்கள் ; சேவாக் ஓபன் டாக் ;

0

ஆஸ்திரேலியா : இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை முழுவதும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற்று வருகிறது. கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கிய போட்டியில் இதுவரை வெற்றிகரமாக 31 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக சுவாரஷியம் குறைய வாய்ப்புகள் இல்லை.

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் நிலை :

இந்த முறை ஆவது உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆமாம், கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியிலும், கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது.

அதேபோல தான் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நடந்து விடுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனென்றால், இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது இந்திய. முதல் இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா அணி ஐந்து புள்ளிகளை பெற்றுள்ளனர்.

அதே சமையத்தில் பங்களாதேஷ் அணி நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நவம்பர் 2ஆம் தேதி அன்று பங்களாதேஷ் அணியையும், நவம்பர் 6ஆம் தேதி அன்று ஜிம்பாப்வே அணியுடனும் மோத உள்ளது இந்திய.

தினேஷ் கார்த்திக் இடத்திற்கு கம்பேக் கொடுப்பாரா விக்கெட் கீப்பர்:

கடந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் பினிஷராக விளையாடி ரன்களை விளாசினார். அதனால் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர் போட்டியில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் ஆசிய, உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் எந்த அளவிற்கு இந்திய அணிக்கு பயனாக இருக்கிறது என்று கேட்டால் கேள்விக்குறி தான். ஆமாம், இப்பொழுது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 1, தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் சில முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதில் இனிவரும் போட்டிகளில் ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுக்கா வேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய அவர் ” இந்த பிரச்னை முதல் நாளில் இருந்தே நடைபெற்று வருகிறது. ரிஷாப் பண்ட் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போன்ற போட்டிகளில் விளையாடியுள்ளார்.”

“ஆனால் தினேஷ் கார்த்திக் இறுதியாக எப்பொழுது ஆஸ்திரேலியாவில் விளையாடினார் ? இது ஒன்றும் பெங்களூர் கிடையாது. நான் இன்று கூட சொன்னேன், தீபக் ஹூடாவிற்கு பதிலாக ரிஷாப் பண்ட் இடம்பெற வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் ரிஷாப் பண்ட்-யிடம் இருக்கிறது.” என்று கூறியுள்ளார் சேவாக்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம்பெற்றுள்ளார். ஆனால் பவுலிங் செய்ய தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பேட்டிங் செய்த தீபக் ஹூடா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

பவுலிங் கொடுக்கப்போவதில்லை என்றால் ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கலாம். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பவுலிங் செய்த காரணத்தால் 19.4 ஓவரில் தான் தென்னாபிரிக்கா அணி வென்றது. இதே ரிஷாப் பண்ட் அணியில் இடம்பெற்று 15 ரன்களை அடித்திருந்தால் இந்திய அணி வென்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இடம்பெற வேண்டுமா ? இல்லையா ? யாருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here