எங்களை பற்றி தவறாக நினைத்து கொண்டு இருக்கீங்க..! இதுதான் எங்கள் பிளான் ; கெய்க்வாட் ஓபன் டாக் ;

0

ரிஷாப் பண்ட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதுவரை மொத்தம் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 1-2 என்ற நிலையில் உள்ளது.

நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்டை இழந்த நிலையில் 179 ரன்களை அடித்தனர். பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆனால் 131 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது தான் உண்மை. தொடரை கைப்பற்றுமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கெய்க்வாட் கூறுகையில் ; ” பவுலர்கள் பின்னால் பேட்ஸ்மேன் இருப்பது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை. என்னை பொறுத்த வரை பேட்ஸ்மேன்களுக்கும் தனி திறமை உள்ளது. ஒவ்வொரு வீரரும் அவரவர் ஷாட்ஸ் அடிப்பதில் சிறந்த வீரராக தான் இருப்பார்கள்.”

“அப்படி விளையாடும் போது எங்களுக்கு ஆறுதலாகவும் எதிர் அணியின் பவுலர்களுக்கு அழுத்தமாகவும் இருக்கும். முதல் பந்து அல்லது இரண்டாவது பந்தில் ரன்களை அடிக்க போகிறது முக்கியமில்லை. சூழ்நிலைக்கு மற்றும் சரியான ஷாட்ஸ் கிடைக்கும்போது அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.”

கடந்த ஆண்டு எனக்கு ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் என்மேல் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். கிரிக்கெட் பொறுத்தவரை ஒரு போட்டி சிறப்பாக இருக்கும், மற்றொரு போட்டி மிகவும் மோசமாக கூட இருக்கலாம்.”

“அது முக்கியமில்லை, நாம் எப்பொழுதும் எந்த சூழ்நிலையில் ஒரே மாதிரியாக யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். இதுவரை மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 81 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் சரியாக வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை அடிப்பாரா ?

உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here