விராட்கோலி அணியில் இடம்பெற்றால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்-க்கு வாய்ப்பு கிடைக்காது ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டி இன்று இரவு ராஜ்கோட்-ல் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி உள்ளது.

இனிவரும் இரு போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். என்ன செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி ? போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாபர் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.

அதில் ” ஷ்ரேயாஸ் ஐயர் 3வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். எப்பொழுது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்றால் நிச்சியமாக அனைவரிடமும் பல எதிர்பார்ப்புகள் இருப்பது வழக்கம் தான். ஏனென்றால் அவரால் தான் அதிக ஓவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்.”

“கடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தொடக்க வீரர்களின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது. அதில் ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக விளையாடிருந்தால் நிச்சியமாக 190 அல்லது 200 ரன்களை அடித்திருக்க முடியும். ஆனால் அவரால் சரியாக விளையாட முடியவில்லை.”

“நிச்சியமாக அவரது பேட்டிங்-ல் இன்னும் நிறைய மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை சரியாக எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளார் ஐயர். இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.”

“அங்கு பவுன்சர் பந்துகள் அதிகமாக இருக்கும், அதனால் பெரிய மைதானத்தில் ரன்களை அடிக்க சிரமம் ஏற்படலாம். அதனால் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்-ல் கவனமாக விளையாட வேண்டும். விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக ஷ்ரேயாஸ் ஐயர்-க்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான்.”

“அதனால் இனிவரும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரு போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாபர்.”

ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் விளையாடி 90 ரன்களை அடித்துள்ளார் ஐயர். இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான டாப் – ஆர்டர் பேட்ஸ்மேன் யார் ? என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!