அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்கு சுரேஷ் ரெய்னா செய்த செயல் வைரலாக பரவி வருகிறது ;

ஐபிஎல் :

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், இதுவரை மொத்தம் 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இரு தினங்களுக்கு தான் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மக்களிடையே வரவேற்பை பெற்றதால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெட்ரா அணியாக தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. இதுவரை, மொத்தம் 15 சீசன் போட்டிகளில் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது சென்னை அணி. அதற்கு முக்கியமான காரணம் தோனி கேப்டன்ஷிப் மற்றும் சுரேஷ் ரைனாவின் பேட்டிங்.

சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்துள்ளார் சுரேஷ் ரெய்னா. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாக விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை.

பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக அணியில் ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார். பின்னர் இறுதி போட்டியில் கூட விளையாட சுரேஷ் ரெய்னா, அடுத்த ஆண்டு அதாவது ஐபிஎல் 15வது சீசனில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஏனென்றால் சென்னை அணி அவரை (சுரேஷ் ரெய்னா) தக்கவைக்கவில்லை. பின்னர் ஏலத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா, அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு யாரும் எடுக்கவில்லை, சென்னை அணியிடம் பணம் இருந்தும் அவரை கைப்பற்றதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு சென்னை அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் இருந்தனர். சமீபத்தில் சுரேஷ் ரெய்னா செய்த ட்விட்டர் பதிவு இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க சொல்லுங்க என்ன செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ? சுரேஷ் ரெய்னாவுக்கு சென்னை அணியில் இடம் கிடைக்குமா ? இல்லையா ? சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் சென்னை அணிக்கு தேவைப்படுமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!