வழக்கம் போல சொதப்பிய தொடக்க நாயகன் ; இனிமேல் இவர் இந்திய அணியில் வேண்டாம் ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

டி-20 உலகக்கோப்பை ; கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி-20 லீக் போட்டிகள். அதில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

அரையிறுதி சுற்றுகள் :

சூப்பர் 12 லீக் தொடரில் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்திய, பாகிஸ்தான் போன்ற நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் செமி பைனல் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் விளையாடினர், அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இரண்டாவது செமி பைனல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.

இந்திய அணிக்கு இருக்கும் முக்கியமான வீக்னஸ் :

கிரிக்கெட் போட்டியின் ஒரு அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தால் நிச்சியமாக அதிகமான ரன்களை அடிக்க முடியும் என்பது தான் உண்மை. ஒருவேளை விக்கெட் இழந்தால் நிச்சியமாக ரன்களை அடிப்பதில் சற்று தயக்கம் ஏற்படும். இதே நிலைமை தான் இந்திய ககிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் தொடர்ந்து ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் சொதப்பி வருகிறார் என்பது தான் உண்மை.

ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் பார்ட்னெர்ஷிப் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய அளவில் எடுபடவில்லை. அதிலும் குறிப்பாக முக்கியமான போட்டிகளில் கே.எல்.ராகுலின் விளையாட்டை எதிர்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் லீக் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார் கே.எல்.ராகுல்.

அதேபோல இன்றைய போட்டி மிகவும் முக்கியமான ஒன்று. இதில் 5 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார் கே.எல்.ராகுல். இதற்குமேல் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு உதவியாக இருக்குமா ?

இந்திய அணியில் இருக்கும் தொடக்க வீரர்கள் :

கடந்த 15 சர்வதேச போட்டிகளில் பல வீரர்கள் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி உள்ளனர். அதில் தீபக் ஹூடா, இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், விராட்கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக விளையாடியுள்ளனர். ஆனால் கே.எல்.ராகுலை தேர்வு செய்துள்ளது இந்திய. இதே நிலைமை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here