CSK அணியின் அடுத்த கேப்டனை ஏலத்தில் கைப்பற்ற போகிறதா சென்னை அணி ? ஜடேஜா இல்லை ..!

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டிகளில் ஒன்று தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். இதுவரை 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் :

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டி. இது 20 ஓவர் போட்டி என்ற காரணத்தால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது ஐபிஎல் போட்டிகள். அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசன் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.

சென்னை அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜா ஆ ?

41 வயதான தோனி கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதனால் இன்னும் சில போட்டிகளில் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி.

ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் தனிப்பட்ட விளையாட்டும் சரி..! சென்னை அணியின் நிலைமையும் மோசமாக இருந்தது. அதனால் உடனடியாக மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தனர். இதனால் ஜடேஜா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு நிச்சியமாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக விளையாட வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை. அப்படி என்றால் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது…!

சன்ரைசர்ஸ் வீரரை குறிவைத்துள்ளதா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக இருக்கும் கேன் வில்லியம்சன்-ஐ ஏலத்தில் விட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் சமீப காலமாகவே வில்லியம்சன் பேட்டிங் பெரிய அளவிற்கு இல்லை.

அதுமட்டுமின்றி, கடந்த சில ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டன் பற்றி சர்ச்சை தொடர்ந்து கொண்ட தான் இருக்கிறது. ஒருவேளை கேன் வில்லியம்சன் ஏலத்தில் இடம்பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஏனென்றால் ஒரு தனிப்பட்ட வீரராக ரன்களை அடிக்கவில்லை என்றாலும் அணியை சிறப்பாக வழிநடத்த கூடிய அளவிற்கு திறமை உள்ளது.

சென்னை அணியின் கேப்டனாக யார் இருந்தால் சிறப்பாக இருக்கும் ? தோனியிக்கு பிறகு யார் கேப்டன் ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!