Dream 11 : CSK vs KKR இன்றைய போட்டியில் விளையாட போகும் முக்கியமான 11 பேர் கொண்ட உத்தேச அணியின் விவரம் :

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2022 போட்டிகள் இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை புதிதாக இரு அணிகளை கொண்டு விளையாட உள்ளது பிசிசிஐ. மொத்தம் 10 அணிகள் என்றதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

இன்றைய முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் 27 போட்டிகளில் விளையாடி உள்ளது.

அதில் சென்னை அணி அதிகபட்சமாக 17 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 8 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் இந்த மெகா ஏலம் நடந்து முடிந்துள்ளது. அதனால் எந்த அணி எப்படி விளையாட போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஐபிஎல் வந்தாலே ட்ரீம் 11 ல் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த வீரர்களை வைத்து தேர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள். இன்றைய போட்டியில் CSK vs KKR உத்தேச ட்ரீம் 11 அணியின் விவரம் இதோ ;

விக்கெட் கீப்பர் ; இங்கிலாந்து அணியை சேர்ந்த வீரரான சாம் பில்லிங்ஸ் (KKR) கடந்த 2018 மற்றும் 2019 போட்டிகளில் சென்னை அணியில் தான் விளையாடி வந்துள்ளார். இருப்பினும் கடந்த இரு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த சாம் இப்பொழுது மீண்டும் இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார்.

சாம் பில்லிங்ஸ் இதுவரை ஐபிஎல் போன்ற மற்ற போட்டிகளில் மொத்தம் 75 போட்டிகளில் 3357 ரன்களை அடித்துள்ளார். இவர் ஒரு விக்கெட் / கீப்பர் பேட்ஸ்மேன்.

பேட்ஸ்மேன் : ருதுராஜ் கெய்க்வாட் (CSK), ஷ்ரேயாஸ் ஐயர் (KKR), டேவன் கான்வே (CSK) , ராபின் உத்தப்பா (CSK) போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளனர். ருதுராஜ் பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

சமீப காலமாக ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி இந்தியா அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஷ்ரேயாஸ். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்த உள்ளார். ராபின் உத்தப்பா நிச்சியமாக டாப் ஆர்டரில் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் – ரவுண்டர் : ரவீந்திர ஜடேஜா (CSK), ஆண்ட்ரே ரசல் (KKR), ஷிவம் துபே (CSK) போன்ற மூன்று வீரர்கள் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவின் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் போன்ற அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்.

கொல்கத்தா அணியை சேர்ந்த ரசல் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் 6 பந்தில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால் அதனை நிச்சியமாக முயற்சி செய்து எடுத்துவிடுவார். ஷிவம் துபே கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார்.

பேட்டிங் அருமையாக செய்த சிவம் துபே விக்கெட்டை மட்டும் கைப்பற்ற முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு அவரது விளையாட்டு நிச்சியமாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலர்கள்: ப்ராவோ, ஆடம் மில்னே, வருண் சக்கரவத்தி போன்ற பவுலர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளாகவே ப்ராவோ சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, வருண் சக்ரவத்தி ஒரு சிறப்பான சுழல் பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை.

( இதில் இருக்கும் வீரர்கள் பட்டியலில் உத்தேச அணி மட்டுமே, நீங்கள் அணியை தேர்வு செய்வது உங்கள் தனிப்பட்ட விருப்பமே )