என்ன நடந்தாலும் இவரை கேப்டனாக விளையாட வைக்க மாட்டோம் ; CSK உறுதி ; அதிர்ச்சியில் ரசிகர்கள் ;

0

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இதுவரை மொத்தம் 15 சீசன்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிக்கான ஏலத்தை பற்றி பேச்சு இப்பொழுது இருந்தே தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலும், தக்கவைத்துக்கொள்ளாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற சர்ச்சை

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக முறை ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

40 வயதான தோனி இன்னும் சில ஆண்டுகளில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த கேப்டன் யாராக இருப்பார் என்றும் இந்த மினி ஏலத்தில் கேன் வில்லியம்சன்-ஐ சென்னை அணி கைப்பற்றினால் கேப்டன் பற்றிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கூடிய விரைவில் தோனியை இந்திய அணிக்கு அழைக்கப்போவதாக பிசிசிஐ உறுதியாக கூறிய நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவாரோ என்று பலர் கேள்விகள் எழுந்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய சிஎஸ்கே அணியின் நிர்வாகம் கூறுகையில் : “அனைவருக்கும் நன்கு தெரியும் தோனி தலைமையிலான அணி சிறப்பாக விளையாடும், அவராலும் சரியாக வழிநடத்த முடியும் என்று.”

“இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தாலும் இன்னும் இந்திய அணியின் சொத்தாக தான் பார்க்கப்படுகிறார். இந்திய அணிக்கு மீண்டும் தோனி இருக்க வேண்டுமென்று தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அதனை பற்றி உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சியமாக அதற்கு ஏற்ப முடிவுகளை கையில் எடுத்தாக வேண்டும்.”

“ஆனால் இப்பொழுது தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன். ஒருவேளை உறுதியான தகவல் பிசிசிஐ-யிடம் இருந்து வந்தால் நிச்சியமாக தோனி எங்களிடம் ஆலோசனை செய்வார். வருகின்ற மினி ஏலத்தில் நாங்கள் மிகவும் கவனமாக தான் இருக்கிறோம். முடிந்தவரை சரியான வீரர்களை தேர்வு செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டு வருகிறோம். இதுவரை ரவீந்திர ஜடேஜாவை எதிர்கால கேப்டன் பதவி திட்டத்திலும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.”

மகேந்திர சிங் தோனி -க்கு பிறகு யார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here