இவங்க இருவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் ; ஹர்டிக் பாண்டிய பளிச் பதில்

0

ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி மழை காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது. இரண்டாவது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றுள்ளது இந்திய,

நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 160 ரன்களை விளாசினார்கள். பின்பு இரண்டாவதாக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் மழை பெய்த காரணத்தால் DLS முறையில் போட்டி முடிவில்லாமல் போய்விட்டது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை கைப்பற்றியுள்ளனர்.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் ஹர்டிக் பாண்டியை கேப்டனாக அறிவித்துள்ளது பிசிசிஐ. சிறப்பாக வழிநடத்துவார் என்று நன்கு தெரியும். ஆனால் ரோஹித் சர்மா, விராட்கோலி செய்த தவறை தான் ஹர்டிக் பாண்டியாவும் செய்திருக்கிறார். அப்படி என்ன செய்தார் ஹர்டிக் ?

இந்திய கிரிக்கெட் அணியில் அதிக அளவில் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒருவர் சஞ்சு சாம்சன் தான். இந்திய அணியில் அவ்வப்போது ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு வாய்ப்பு கொடுத்ததும் அதனை சரியாக பயன்படுத்தாமல் விளையாடி வருகிறார். அதனால் ஐயருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் -க்கு இடம்கொடுக்க வேண்டும் என்று அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டியாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு ஏன் ? வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : ” அணியை தவிர்த்து வெளியில் இருக்கும் மற்றவர்கள் சொல்வதை யாருக்கும் தெரியாது. வெளியே இருந்து வரும் கருத்துக்கள் யாரையும் தொந்தரவு செய்யாது. இது என்னுடைய டீம் , நான் பயிற்சியாளர்களிடன் ஆலோசனை செய்த பிறகு தான் முடிவுகளை எடுப்பேன். இன்னும் போதுமான அளவு நேரம் இருக்கிறது. அதனால் மற்றவர்களுக்கு நிச்சியமாக வாய்ப்பு கிடைக்கும்.”

“அதுமட்டுமின்றி, இது ஒரு குறுகிய சீரியஸ் போட்டி, ஒருவேளை இந்த தொடரில் இன்னும் போட்டிகள் இருந்திருந்தால் நிச்சியமாக பெஞ்ச் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

மேலும் தீபக் ஹூடாவை தேர்வு செய்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் என்று பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “எனக்கு 6வதாக பவுலிங் தேவைப்படுகிறது. அதனை தீபக் ஹூடாவும் சிறப்பாக செய்தார். ஒருவேளை எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட தொடங்கினால் அவருக்கு ஆச்சரியமாக இருக்கும் வகையில் நாம் இப்படி பவுலிங் செய்ய ஆட்களை தயாராக வைத்திருக்க வேண்டுமென்று கூறியுள்ளார் ஹர்டிக்.”

நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் எந்த வீரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டுமென்று நீங்க நினைக்குறிங்க ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here