நேற்று இரவு நடந்த 7வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிங்கிய சென்னை அணிக்கு பேட்டிங் அட்டகாசமாக அமைந்தது. தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்-ஐ தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அவரவர் பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார்கள். அதிலும் 40 வயதான தோனி இறுதி நேரத்தில் பவுண்டரிகளை அடித்து தொம்சம் செய்தார்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ராபின் உத்தப்பா 50, ருதுராஜ் கெய்க்வாட் 1, மொயின் அலி 35, சிவம் துபே 49, அம்பதி ராயுடு 27, ரவீந்திர ஜடேஜா 17, டோனி 16, ப்ராவோ 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி.
தொடக்கத்தில் இருந்து சென்னை அணியை போல அதிரடியாகவே விளையாடி வந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் சற்று தயக்கம் காட்டினாலும் பின்னர் போக போக ரன்களை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் சென்னை அணியால் ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இறுதி வரை போராடிய லக்னோ அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில் 211 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை பெற்று 8வது இடத்தில் உள்ளனர்.
போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் கேப்டனான ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ; ” நாங்க போட்டி தொடங்கும் போது சிறப்பாக தான் ஆரம்பித்தோம். குறிப்பாக ராபின் உத்தப்பா, சிவம் துபே அட்டகாசமாக விளையாடி சென்னை அணிக்கு ரன்களை சேர்த்தனர்.”
“அதேபோல தான் பவுலிங் தொடக்கத்தில் சிறப்பாக தான் தொடங்கினோம். ஆனால் ரன்கள் போகிறது என்பதை தெரிந்த்து ஒரே மாதிரி வீசியது தான் மிகவும் தவறாக மாறியது. அதுவும் பீல்டிங் சரியாக செய்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு கேட்ச் போடியின் வெற்றியை முடிவு செய்யும்.”
“ஆனால் பேட்டிங் ஆர்டரில் முதல் 6 வீரர்கள் அருமையாக விளையாடி வருகின்றனர். அதனால் எந்த பயமும் இல்லை, ஆனால் பவுலிங் பக்கத்தை தான் சில முக்கியமான மாற்றங்கள் மற்றும் சில முக்கியமான ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது…! நாங்கள் நினைத்த மாதிரி பவுலிங் செய்யவில்லை என்பது தான் உண்மை என்று வருத்தமாக பேசினார் ரவீந்தர ஜடேஜா.”