இந்த முடிவை நிச்சியமாக தோனி எடுத்திருக்க மாட்டார் ; அப்போ ஜடேஜாவின் முடிவால் தான் சென்னை அணிக்கு இப்படி ஒருநிலைமையா ?

0

இன்று இரவு மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு அட்டகாசமான தொடக்க ஆட்டம் என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் ருதுராஜ் எந்த ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தாலும், ராபின் உத்தப்பா சரியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்துள்ளது சென்னை அணி. முதல் போட்டிக்கு எதிர்மாறாக நடந்துள்ளது தான் உண்மை. ராபின் உத்தப்பா 50, ருதுராஜ் 1, மொயின் அலி 35, ஷிவம் துபே 49, அம்பதி ராயுடு 27, ரவீந்தர ஜடேஜா 17, மஹேந்திர சிங் டோனி 16, ப்ராவோ 1 ரன்களை அடித்துள்ளனர்.

நம்ம சென்னை அணியில் இப்படி ஒரு மாற்றமா ??

ஆமாம், ‘கடந்த ஆண்டு வரை சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு முதல் சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா தான் சென்னை அணியை கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பேட்டிங் இருந்த காரணத்தால் 131 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதிலும் தொடக்க வீரரான டேவன் கான்வே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணியில் இடம்பெற்றதில் இருந்து டேவன் கான்வே பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்த நேரத்தில் முதல் போட்டியில் அவரது பேட்டிங்-கில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது தான் உண்மை.

இருப்பினும் இதே தோனி கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயமாக டேவன் கான்வே குறைந்தது மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் இரண்டாவது போட்டியில் டேவன் கான்வே -க்கு பதிலாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக களமிறங்கி விளையாடியுள்ளார் ராபின் உத்தப்பா.

அதனால் இந்த முடிவை தோனியுடையதாக இருக்க வாய்ப்பே இல்லை. இது நிச்சயமாக ரவீந்திர ஜடேஜாவின் முடிவாக தான் இருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் இன்றைய போட்டியில் ராபின் உத்தப்பாவின் அதிரடியான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை ஏற்றுள்ளது.

சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க, இனிவரும் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்தால் சரியாக இருக்குமா இல்லையா ? உங்க கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here