இவர் மட்டும் இல்லையென்றால் பேட்டிங் அவ்வளவு தான் , CSK அணி கடினமான சூழல் உருவாகியிருக்கும் ; மொயின் அலி

0

போட்டி 7: மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய போவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பாக தொடக்க அமையாவிட்டாலும், பின்னர் அனைவரும் ரன்களை அடிக்க ஆரம்பித்தனர். அதிலும் குறிப்பாக ராபின் உத்தப்பா பவர் ப்ளே -வை சரியாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்பது தான் உண்மை.

அவரது அதிரடியான ஆட்டத்தால் 27 பந்தில் 50 ரன்களை அடித்துள்ளார். பின்னர் ஒருவர் பின்னர் ஒருவராக சென்னை அணிக்கு ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்த நிலையில் 210 ரன்களை அடித்துள்ளனர். அதில் ராபின் உத்தப்பா 50, ருதுராஜ் 1, ராயுடு 27, மொயின் அலி 35, ஷிவம் துபே 49, தோனி 16, ப்ராவோ 1 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு வெற்றி கிடைத்தது. தொடக்கத்தில் இருந்து தயக்கம் இல்லாமல் விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இப்பொழுது தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் ஆல் – ரவுண்டரான மொயின் அலி அளித்த பேட்டியில் ; “உண்மையிலும் சென்னை அணியின் பேட்டிங் அருமையாக இருந்தது. தொடக்கத்தில் சிறப்பாக தொடங்கியது தான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.”

“நிச்சியமாக எங்களுக்கு பவுலிங்-கில் பிரச்சனை இருக்கும் ஏனென்றால் எதிர் அணியில் பேட்டிங் லைன் மிகவும் சிறப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிதான் பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளனர். இப்பொழுது பேட்டிங்-கில் சரியான தொடக்க ஏற்படும் போது நம்மால் முடிந்த வரை ரன்களை அடிக்க தோன்றும்.”

” நிச்சியமாக ராபின் உத்தப்பா இன்றைய போட்டியில் அட்டகாசமாக விளையாடியுள்ளார். ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடியது என்னை போன்ற வீரர்களுக்கு அது சிறப்பாக இருந்தது. ஏனென்றால் அவர் எதிரில் நின்று கொண்டு பவுண்டரிகளை அடிக்கும்போது அதனை நானும் செய்ய ஆசைப்பட்டேன் என்று கூறியுள்ளார் மொயின் அலி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here