புகழ்பெற்ற வீரராகவே இருக்கட்டும் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றலாம் ; கபில் தேவ் அதிரடி ; யார் அது தெரியுமா ?

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவுசெய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 170 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 31, ரிஷாப் பண்ட் 26, ரவீந்திர ஜடேஜா 46 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 171 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம், தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதனால் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையாமல் போனது. 17 ஓவர் முடிவில் 121 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது இங்கிலாந்து அணி. அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய. அதுமட்டுமின்றி 2 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இதில் விராட்கோலி மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடி வருகிறார். விராட்கோலி நேற்று நடந்த போட்டியில் 3 பந்தில் 1 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பெரியளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை.

இதனை பற்றி பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் ” ஆமாம், இப்பொழுது இருக்கும் நிலவரத்தை பார்த்தால் விராட்கோலி நிச்சியமாக பெஞ்ச்-ல் தான் உட்கார வைக்க வேண்டும், ப்ளேயிங் 11ல் இருந்து.”

“உலக தரவரிசை பட்டியலில் 2வது சிறப்பான பவுலருக்கு (ரவிச்சந்திரன் அஸ்வின்) போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால், 1வது இடத்தில் உள்ள பேட்ஸ்மேன் விராட்கோலி-யும் ப்ளேயிங் 11 ல் இருந்து வெளியேற்றலாம். ஒருகால கட்டத்தில் அவரது பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது.”

“அதனால் அவருடைய பெயர் பெரியளவில் புகழ்பெற்றது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை, இவர் விளையாடுவார் என்பதற்காக சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கூறியுள்ளார் கபில் தேவ்.” இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளிலும் இப்படியே விளையாடினால் உலகக்கோப்பை போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here