இந்திய அணியில் நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை ; எங்களுக்கு வேறு வழியும் இல்லை ; கங்குலி ஓபன் டாக்

0

இந்திய :

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டிக்கான தொடர் போட்டி சம நிலையில் முடிந்தது. அதனால் எப்படியாவது டி-20 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக விளையாடி வருகிறது இந்திய.

முதல் டி-20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றுள்ளது இந்திய. அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் டி-20 போட்டிக்கான தொடரை இந்திய அணி பெற்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இருப்பினும் இந்திய அணியில் ஏன் அடிக்கடி கேப்டன் மற்றும் மாறிக்கொண்டே இருக்கின்றனர் ? கடந்த 10 மாதங்களில் மட்டும் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற வீரர்கள் அணியை வழிநடத்தி உள்ளனர்.

அதற்கு என்ன காரணம் என்று பல கேள்விகள் கேட்கப்பட்டது…! இதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ; “நான் இதனை ஒப்புக்கொள்கிறேன். குறுகிய காலத்தில் இப்படி அதிகமாக கேப்டன் ஒரு அணியை வழிநடத்தியது, ஆனால் வேறு வழியில்லை.”

“தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்தார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ஒருநாள் போட்டிகளை கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்தார். சமீபத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ரிஷாப் பண்ட் கேப்டனாக விளையாடினார்.”

“இப்பொழுது நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் இதில் யாருடைய தவறும் இல்லை. கிரிக்கெட் போட்டிகள் அந்த மாதிரி இடைவெளியில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. “

“அதனால் சில நேரங்களில் ஓய்வு நிச்சியமாக தேவைப்படுகிறது. ராகுல் டிராவிடும் தொடர்ந்து போட்டிகளை வழிநடத்தி வருகிறார். இதுபோன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் புதிய கேப்டன் நிச்சயமாக தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார் கங்குலி…!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here