அடுத்த ஆண்டு சென்னை அணியில் ஜடேஜா விளையாடுவாரா ? இல்லையா ? CSK நிர்வாகம் என்ன பதில் சொன்னது ;

0

சீரியஸ் தொடர் போட்டிகள் :

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டியில் ஒரு போட்டியில் வென்றால் தொடரை சுலபமாக கைப்பற்றிவிடும்.

ஐபிஎல் :

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதன்பின்னர் ரசிகர்கள் வரவேற்பு பெற்ற காரணத்தால் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20 போட்டிகள். இதுவரை மொத்தம் 15 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதை ஐபிஎல் அறிமுகம் ஆன நேரத்தில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தல மகேந்திர சிங் தோனி தான் வழிநடத்தி வருகிறார்.

40 வயதான தோனி எந்த நேரத்தி வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது சென்னை அணி. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு சென்னை அணி மட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவும் சரியாக விளையாடவில்லை.

ஆமாம், அதனால் ஐபிஎல் 2022 போட்டியின் நடுவில் மீண்டும் கேப்டனாக மாறினார் தோனி. இதற்கிடையில், ஜடேஜாவுக்கும் சென்னை அணிக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கும் என்று பல சந்தேகங்கள் எழுந்தனர். அதுமட்டுமின்றி, தோனி கேப்டனாக பொறுப்பேற்ற சில போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ஐபிஎல் 2022 போட்டியை விட்டு விலகினார் ஜடேஜா.

இப்பொழுது வைரலாகும் பதிவு :

சில தினங்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவின் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பதிவை delete செய்துள்ளார். இதனால் சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கும் இருக்கும் உறவு அவ்வளவு தான் போல, இனி ஜடேஜா சென்னை அணியில் விளையாட மாட்டார் என்று தவறான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை அணி சில தகவலை வெளியிட்டுள்ளது. அதில் “இதில் என்ன தவறு உள்ளது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் தான். அதனால் இந்த மாதிரி அவர் செய்ததற்கும் எங்களுக்கும் ஒன்றும் இல்லை. அதனால் ரவீந்திர ஜடேஜாவுக்கும் சென்னை அணிக்கும் எந்த விதமான பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here