இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
ஆசிய கோப்பைக்கான போட்டியில் பங்களிக்க போகும் அணியின் விவரம் :
இந்திய, இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , பங்களாதேஷ், போன்ற நாடுகள் மோத உள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் பங்களிக்கும் வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்து வருகின்றனர். அதேபோல தான் பிசிசிஐ, சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
இந்திய அணியின் விவரம் :
சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்,முகமத் சிராஜ், முகமத் ஷமி, ஷர்டுல் தாகூர், உம்ரன் மலிக் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த முறையும் முன்னணி வீரர் முக்கியமான போட்டியில் இடம்பெறவில்லைய ?
கடந்த ஒருவருடமாக இந்திய அணியில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார் பும்ரா. ஆமாம், காயம் காரணமாக போட்டிகளில் பங்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. NCA வில் தீவிரமான பயிற்சியில் இடம்பெற்று வருகிறார் பும்ரா. இருப்பினும் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. அதனால் ஆசிய கோப்பையில் பும்ரா விளையாடினால் அவருக்கு மீண்டும் போர்மிற்கு திரும்ப உதவியாக இருந்திருக்கும். அவருக்கு பதிலாக இளம் வீரரான உம்ரன் மலிக் இடம்பெற்றுள்ளார்.
இதுவரை நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் 7 முறை இந்திய கிரிக்கெட் அணியும், 6 முறை இலங்கை அணியும், இரு முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளனர். இறுதியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.