இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் வருகின்ற ஜூலை 12ஆம் தெத்து முதல் நடைபெற உள்ளது. அதில் இரு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிக்கான தொடரில் விளையாட உள்ளனர்.
சமீபத்தில் இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ்-ல் சென்று தீவிரமான முறையில் பயிற்சி செய்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர், ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் விளையாடுவதால் நிச்சியமாக இந்திய அணிக்கு உலகக்கோப்பை போட்டியில் சாதகமாக இருக்கும்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோசமான நிலையில் விளையாடி ஆஸ்திரேலியா அணியின் தோல்வியை பெற்றது இந்திய. அதனால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற போகின்ற ஒருநாள் போட்டிக்கான தொடரில் வெல்ல அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது பிசிசிஐ.
அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவரான கம்பிர் கருத்தை கூறியுள்ளார்.
அதில் “இந்திய கிரிக்கெட் அணியில் ரவி பிஷானி, குல்தீப் யாதவ் போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இருப்பினும் யுஸ்வென்ற சஹால் ஒரு சில முக்கியமான போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். 20 ஓவர் போட்டியாக இருந்தாலும், 50 ஓவர் போட்டியாக இருந்தாலும் அவரது பங்களிப்பு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி கொண்டே தான் வருகிறார்.”
“அதனால் அவர் மேல் ஒரு கண்ணு வையுங்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் வ்ரிஸ்ட்-ஸ்பின்னர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2011ஆம் ஆண்டு பியூஸ் சாவ்லா சிறப்பாக பவுலிங் செய்திருந்தார். 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போது ஹர்பஜன் சிங் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் என்று கூறியுள்ளார் கங்குலி.”
இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா, பிஷானி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் இருகின்றனர். இதில் ரவீந்தர ஜடேஜா ஆல் – ரவுண்டர் என்றதால் உறுதியாக இந்திய அணியில் வாய்ப்பு இருக்கும். எந்த சுழல் பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் அன்பான கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!