விராட், ரோஹித் இல்லை ; இவர் மட்டும் ENTRY கொடுத்தால் ஒருநாள் உலகக்கோப்பை நமக்கு தான் ; ரசிகர்கள் வரவேற்பு ;

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் விளையாட இருந்தனர். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த சீரியஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது. அதனை அடுத்து வருகின்ற ஜூலை 12ஆம் தேதி முதல் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய மோதும் போட்டியின் விவரம் :

12ஜூலை – 16ஜூலை – முதல் டெஸ்ட்

20 ஜூலை – 24 ஜூலை – இரண்டாவது டெஸ்ட்

27 ஜூலை – முதல் ஒருநாள் போட்டி

29 ஜூலை – இரண்டாவது ஒருநாள் போட்டி

01 ஆகஸ்ட் – மூன்றாவது ஒருநாள் போட்டி

03 ஆகஸ்ட் – முதல் டி-20

06 ஆகஸ்ட் – இரண்டாவது டி-20

08 ஆகஸ்ட் – மூன்றாவது டி-20

12 ஆகஸ்ட்- நான்காவது டி-20

13 ஆகஸ்ட்- ஐந்தாவது டி-20

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் அதற்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ருதுராஜ், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியும் : இந்திய கிரிக்கெட் எங்களை வென்றாலும் பரவாயில்லை ; ஆனால் ஒருபோதும் இதை விட்டுக்கொடுக்கமாட்டோம் ; பாகிஸ்தான் வீரர் உறுதி

இந்திய அணிக்கு திரும்ப உள்ள முன்னணி வீரர் ?

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் சற்று மோசமான நிலையில் தான் இருக்கிறது. ஏனென்றால், முன்னணி வீரரான பும்ரா தீடீரென்று காயம் காரணமாக வெளியேறியதால் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய சூழநிலைக்கு தள்ளப்பட்டது இந்திய அணி.

முன்னணி வீரரான பும்ரா காயம் காரணமாக எந்த விதமான போட்டிகளில் கடந்த ஒரு ஆண்டுகளாகவே விளையாடியது இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் கூட பங்காளிக்கவில்லை. சமீபத்தில் வெளியான தகவலின் படி பும்ரா இப்பொழுது 7 ஓவர் வரை பவுலிங் செய்து வருகிறார். இருப்பினும் அவரது பிட்னெஸ் -ஐ கண்காணித்து கொண்டு தான் வருகின்றனர்.

ஆனால் எந்த போட்டியில் இருந்து விளையாடுவார் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு ஆசிய கோப்பை ஆகஸ்ட் இறுதியில் இருந்து நடைபெற உள்ளது. அதில் பும்ரா பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரர் யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள் ..!