இன்று இங்கிலாந்துக்கு மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4வது டி-20 போட்டி அஹமதாபாத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 7 மணி;அளவில் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி இரு போட்டிகளிலும் இந்தியா அணி ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு போட்டி இந்தியா அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கடந்த மூன்று போட்டியிலும் இந்தியா அணிக்கு சிறப்பான பேட்டிங் ஆர்டர் இல்லை என்பதே உண்மை. அதிலும் கே.எல்.ராகுல் இதுவரை களம் இறங்கி விளையாடிய மூன்று போட்டியிலும் சேர்த்தி வெறும் ஒரு ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதனால் நிச்சயமாக இந்திய போட்டியில் அவருக்கு பதிலாக தவான் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியா அணியில் பும்ரா இல்லாத காரணத்தால் இங்கிலாந்து அணியின் விக்கெட் எடுப்பதில் புவனேஸ்வர் குமார் , தாகூர் , சஹால் போன்ற வீரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனால் பௌலிங்கை விட பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கும்பட்சத்தில் இந்தியா அணி வெற்றி பெற அதிக உள்ளன.
இன்னும் மீதமுள்ள இரு போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே சீரியஸை கைப்பற்ற முடியும். ஆனால் இங்கிலாந்து இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போதும். அதனால் இந்தியா அணியில் இன்று யார் யார் இருப்பார்கள் என்று பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றனர்.
இந்தியா அணி :
ரோஹித் சர்மா மற்றும் தவான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார்கள். அதன் பின்னர் இஷான் கிஷான், விராட் கோலி , ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்டிக் பாண்டிய , வாஷிங்டன் சுந்தர் ,தாக்குர், புவனேஸ்வர், மற்றும் சாஹல் ஆகிய வீரர்கள் அணியிகள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.