போன முறை தான் சிஎஸ்கே அணி இதனை செய்யவில்லை ; இந்த முறையாவது ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா ?? சிஎஸ்கே ..!!!

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால அனைத்து அணிகளும் யாரை அணியில் கைப்பற்ற வேண்டும் என்று பல யோசனை செய்து வருகின்றனர்.

ஐபிஎல் 2022 போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த மெகா ஏலம் நடத்த முடிவு செய்த பிசிசிஐ, போன வருடம் இருந்த 8 அணிகளுக்கும் அறிவிப்பை வெளியிட்டது. அதில் அதிபட்சமாக தலா 4 வீரர்களை மட்டும் தான் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ.

அதேபோல, தக்கவைக்கப்பட்ட பட்டியலை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டது. பின்னர் புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக தலா 3 வீரர்களை தான் கைப்பற்ற முடியும் என்றும் பிசிசிஐ கூறியது. அதில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டிய மற்றும் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் ஆகியுள்ளனர்.

ஐபிஎல் போட்டி என்று வந்துவிட்டால் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்பொழுதும் வரவேற்பு அதிகம் தான். அதில் மாற்றுகருதில்லை. இதுவரை ஐபிஎல் ஆரம்பித்த காலம் முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருவது தோனி தான். அதுமட்டுமின்றி தோனி தலைமையில் இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஆமாம்..! சிஎஸ்கே அணி எந்த நிலையில் இருந்தாலும் அதிக ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி, ஏன் சென்னை சூப்பர் கிங்க அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெயர் மட்டும் சென்னை ஆனால் ஒரு வீரருக்கு கூட வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர்.

ஆமாம்…! அதனால் இந்த முறை மெகா ஏலம் என்பதால் இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் நான்கு வீரர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் ஏலத்தில் தமிழக வீரரை கைப்பற்றுமா ? தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ? என்ன செய்ய போகிறார் தோனி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here