ஐபிஎல் 2022 ; சிஎஸ்கே அணி கைப்பற்ற போகும் முதல் பவுலர் இவர் தான் : இவர் பவுலர் மட்டுமின்றி சிறப்பான பேட்ஸ்மேனும் கூட ; அப்போ ஏலத்தில் பரபரப்பு ஏற்படம்…!

0

ஐபிஎல் ; கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற தொடங்கியது. பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மிதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ அறிவித்தது.

பின்னர் மீதமுள்ள இரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று வீரர்கள் மட்டுமே கைப்பற்ற முடியும் என்று கூறியது பிசிசிஐ. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் மகேந்திர சிங் தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

ஆனால் ஏலத்தில் யாரை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய போகிறது என்று பல குழப்பத்தில் உள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள். இன்னும் சில ஆண்டுகளில் தோனி ஓய்வு பெற போகிறார். அதனால் இப்பொழுது சரியான வீரரை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அதில் தீபக் சஹாரை கைப்பற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக வலம் வருகிறார். ஆனால் வேறு வழியில்லாமல் தீபக் சஹாரை அணியில் கைப்பற்ற முடியாமல் போனது. சமீப காலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அவரது திறமையை சரியாக வெளிப்படுத்தி வருகிறார் தீபக் சஹார்.

பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் செய்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் தீபக். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும்போது டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்து வந்துள்ளார். அதனால் நிச்சியமாக ஏலத்தில் இவரை கைப்பற்ற அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை பற்றி சிஎஸ்கே அணிக்கு நன்கு தெரியும் அதனால் நிச்சியமாக சிஎஸ்கே அணி தான் முதலில் ஏலத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணியை பற்றி கூறுகையில் ; சமீப காலமாக தீபக் சஹார் மட்டும் தான் புதிய பந்தில் தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றி வருகிறார். அவர் மட்டும் தான் தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றி வருகின்றார்.

தீபக் சஹார் முதல் மூன்று ஓவர்களில் அதிக விக்கெட்டை கைப்பற்றி எதிர் அணியின் ஆட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவார். அதற்கு நான் அவர் டெத் பவுலர் என்று சொல்லமாட்டேன், ஆனால் அதற்கு அவரை பயன்படுத்தலாம். அதனால் நிச்சியமாக சிஎஸ்கே அணி ஏலத்தை தொடங்கும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. இதுவரை தீபக் சஹார் 63 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here