இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்கத்தில் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தடுமாற்றத்துடன் களமிறங்கியது. ஆனால் தென்னாபிரிக்கா கேப்டனான தெம்பா பவுமா மற்றும் டூஸ்ஸன் ஆகிய இருவரும் மாற்றி மாற்றி சதம் அடித்து தென்னாபிரிக்கா அணியின் ரன்களை உயர்த்தினார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 296 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 295 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. ஆனால் இறுதியில் காத்திருந்தது தோல்வியே. ஆமாம் .. தொடக்க வீரரான கே.எல்.ராகுல் -க்கு சரியான பார்ட்னெர்ஷிப் இல்லாமல் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் ஷிகர் தவான் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து 100க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர். அதன்பின்னர் பேட்டிங் செய்த பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்த காரணத்தால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது.
அதனால் இறுதி ஓவர் 265 ரன்களை தான் அடித்துள்ளது இந்திய. தென்னாபிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. போட்டி முடிந்த பிறகு கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் ; இது நல்ல ஒரு போட்டி, இதில் நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.
நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக தான் தொடங்கினோம். ஆனால் மிடில்-ல் சரியாக விக்கெட்டை தக்கவைத்துக்கொள்ள வில்லை. முதல் 20 ஓவர்கள் சிறப்பாக தான் விளையாடினோம். அதற்கு முக்கியமான காரணம் எதிர் அணியின் பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர்.
முன்பே விராட் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் மிடில்-ல் ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும், அதுமட்டுமின்றி சில நேரங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றாலும் ஆட்டம் இழக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம் என்று.
ஆனால் எதிர்பாராத விதமாக அது நடக்கவில்லை. ஆமாம் எங்களுக்கு பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் ரன்களை அடிக்கவில்லை. தென்னாபிரிக்கா வீரர்களின் விக்கெட்டை மிடில் ஓவர்களில் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.
அனைத்து போட்டிகளும் முக்கியமான போட்டி தான், ஆனால் வெற்றி பெறுவதை விட அவரவர் திறமையை சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். இப்பொழுது 1- 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.
ஒருநாள் போட்டியில் ஆவது இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..! இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!