காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் வெளியேறிய நட்சத்திர வீரர் ; இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக இருக்குமா?

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய.

இரண்டாவது போட்டியில் சுருக்கம் :

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய அளவில் தொடக்க ஆட்டம் அமையவில்லை என்றாலும் நிதானமாக விளையாடிய நிலையில் 78.4 ஓவர் முடியவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 263 ரன்களை அடித்தனர்.

பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 264 ரன்களை அடித்தால் மட்டுமே முன்னிலையில் இருக்க முடியும். ஆனால் எதிர்பார்த்த படி தொடக்க ஆட்டம் அமையாத காரணத்தால் மோசமான நிலையில் இருந்தது இந்திய.

பின்பு விராட்கோலி, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் ரன்களை அடித்த காரணத்தால் 83.3 ஓவர் முடிவில் 262 ரன்களை இந்திய அணியால் அடிக்க முடிந்தது. பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணியால் வெறும் 113 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.

பின்னர் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 116 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் களமிறங்கினார்கள். அப்பொழுது சிறப்பாக விளையாடிய இந்திய 4 விக்கெட்டை இழந்த நிலையில் 118 ரன்களை குவித்தனர். அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியா அணியின் அதிரடி மற்றும் தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிக்கான தொடரிலும் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆமாம், பேட்டிங் வலுவாக இல்லாத காரணத்தால் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான நிலையில் இருந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலியா அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

டேவிட் வார்னர் அணியில் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு ஆபத்தாக இருக்கும ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் ..!