வீடியோ : பதட்டத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா ; பட்டைய கிளப்பும் இந்திய வீரர்கள் ;

0

இந்திய கிரிக்கெட் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிலும் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டிக்கான தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி ரன்களை சரமாரியாக குவித்தனர். அதனால் 167.2 ஓவர் விளையாடிய நிலையில் 480 ரன்களை அடித்தது ஆஸ்திரேலியா அணி.

அதில் உஷம்ன கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் அதிரடியாக ரன்களை குவித்தனர். பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல ஒரு தொடக்க வீரர் (ரோஹித் சர்மா) 35 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் இளம் வீரரான சுப்மன் கில் அதிரடியாக ரன்களை அடித்து சதம் அடித்தார். அதனை தொடர்ந்து விராட்கோலி, ஸ்ரீகர் பாரத், புஜாரா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் குறைவான ரன்களை அடித்து விக்கெட்டை இழந்து வருகின்றனர்.

இப்பொழுது இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட்கோலி மற்றும் ஸ்ரீகர் பாரத் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்து வருகின்றனர். இதுவரை 128 ஓவர் முடிந்த நிலையில் 348 ரன்களை அடித்த நிலையில் 4 விக்கெட்டை இழந்துள்ளனர்.

அதில் ரோஹித் சர்மா 35, சுப்மன் கில் 128, புஜாரா 42, விராட்கோலி 82*, ரவீந்திர ஜடேஜா 28, ஸ்ரீகர் பரத் 21* ரன்களை அடித்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியா அணி வெல்ல வேண்டுமென்று அதிரடியாக பவுலிங் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் துள்ளியமாக போட்டியை எப்படியாவது ட்ரா பண்ண வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, விராட்கோலி மற்றும் ஸ்ரீகர் பரத் பார்ட்னெர்ஷிப்-ஐ தகர்க்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள்.

சரியாக 123.2 ஓவரில் ஆஸ்திரேலியா வீரரான லியோன் வீசிய பந்தை எதிர்கொண்டார் விராட்கோலி. அப்பொழுது துள்ளியமாக பேட்டிங் செய்த விராட்கோலி சிங்கிள் ரன் அடித்தார். ஆனால் பதற்றத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சரியாக பவுலர் கையிக்கு பந்தை வீசாமல் ஆல் இல்லாத இடத்தில் வீசினார்.

அது எதிர்பாராத விதமாக பவுண்டரி லைன்க்கு சென்றது. ஸ்ட்ராக் வேகமாக ஓடி பவுண்டரி போகமாக தடுத்து நிறுத்தினார். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here