திரும்ப வந்துட்டேனு சொல்லு…! சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் ; அடிப்பாரா ?

இந்திய மாற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

இருப்பினும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. ஆமாம், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடி ரன்களை குவித்தார். 167.2 ஓவர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்களை அடித்தனர்.

அதில் கவாஜா 180, க்ரீன் 114, ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களை அடித்துள்ளனர். பின்பு இந்திய அணியால் தாக்கு பிடிக்க முடியுமா என்று பல கேள்விகள் எழுந்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 35 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இளம் வீரரான சுப்மன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆறுதலாக மாறியது. இதுவரை 120 ஓவர் முடிந்த நிலையில் 4 விக்கெட்டை இழந்த இந்திய 332 ரன்களை அடித்துள்ளனர்.

இதில் ரோஹித் சர்மா 35, சுப்மன் கில் 128, புஜாரா 42, விராட்கோலி 71*, ரவீந்திர ஜடேஜா 28 ரன்களை அடித்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றியை விட ட்ரா மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியால் செய்ய முடியும். என்ன செய்ய போகிறது இந்திய ? ட்ரா செய்து தொடரை கைப்பற்றுமா ??

மீண்டும் கம்பேக் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் :

தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வந்தார் விராட்கோலி. அதிக ரன்களை அடித்து பல சாதனைகளையும் செய்துள்ளார். இருந்தாலும் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எந்த விதமான உலககோப்பையையும் வென்றதில்லை.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியை சிறப்பாக உருவாக்கிய பெருமை நிச்சியமாக விராட்கோலி-க்கு தான் கிடைக்கும். இருப்பினும் சமீப காலமாகவே விராட்கோலியின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை.

அதுவும் டெஸ்ட் போட்டிகளில் 40 அல்லது 50 ரன்கள்-குள் அடித்துவிட்டு விக்கெட்டை இழந்து வருகிறார். ஆனால் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான தொடரில் அருமையாக விளையாடி வரும் விராட்கோலி 192 பந்தில் 71 ரன்களை அடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட்கோலி நிச்சியமாக சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்…! விராட்கோலி இறுதியாக 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 139 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.