ஆசிய கோப்பை 2022:
நேற்று இரவு முதல் ஆசிய கோப்பை போட்டிகள் 2022 சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் போன்ற அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இரு அணிகள் மோதின. அதில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிய புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்…! கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது பாகிஸ்தான். அதற்கு தக்க பதிலடி கொடுக்குமா ? இந்திய என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க..! விராட்கோலி எப்படி விளையாட போகிறார் என்பதை பற்றி தான் அனைவரின் கவனமும் இருக்கிறது. ஆமாம், கடந்த சில மாதங்களாக விராட்கோலியின் விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை. பலர் விராட்கோலிக்கு ஆதரவாக தான் பேசிக்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, நிச்சியமாக ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் கம்பேக் கொடுப்பார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விராட்கோலி பற்றிய கேள்வியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாபர் ஆசாம் கூறுகையில் ; ” வாழ்க்கையில் எதுவும் சுலபமானது கிடையாது. வாழ்க்கையில் வெற்றிபெற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உங்க வாழ்க்கையில் நீங்க எப்படி வெற்றிபெற போகிறார்கள் என்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதில் சவால்களை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை வைத்துதான் மற்ற விஷயங்கள் உள்ளது.”
“விராட்கோலி உலகத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தான். அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போட்டியிடுகிறீர்கள் ? அதுவும் மாறுபட்ட அணியிலும் , மாறுபட்ட சூழ்நிலைகளில் விளையாடி வருகிறோம். நிச்சியமாக அனைத்து வீரர்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்க தான் செய்யும்.
“ஒரு வீரர் என்றால் வெற்றியாக தான் இருக்கும், தோல்வியே இருக்காது என்று சொல்லவே முடியாது. இதனையெல்லாம் சமாளிக்க கூடிய மனநிலை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம் என்று விராட்கோலி-க்கு ஆதரவாக பேசியுள்ளார் பாபர் ஆசாம்.”