இந்திய அணிக்கு திரும்ப வந்துட்டாரு ; அப்பாடா..! இனிமேல் இந்திய அணிக்கு பயமில்லை ; ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

ஆசிய கோப்பை 2022; உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போட்டி இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ளது. மற்ற போட்டிகளை விட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் பல சுவாரஷியம் இருக்கும்.

இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இதுவரை ஆசிய கோப்பை போட்டிகளில் மொத்தம் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்திய அணி 8 முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வென்றுள்ளனர். மீதமுள்ள ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது.

இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

ஆசிய கோப்பையை வெல்வதை விட பாகிஸ்தான் அணியை வெல்ல வேண்டுமென்று தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனநிலை இருக்கிறது. ஏனென்றால் இதே மைதானத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகளில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

அதனை திருப்பி கொடுக்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி கடந்த அண்டை ஒப்பிட்டு பார்த்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து விதமான தொடரிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

தலைமை பயிற்சியாளர்:

கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட். ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் காம்போ அதிக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ராகுல் டிராவிட் எப்பொழுதும் இளம் வீரர்களுக்கும், அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு அவ்வப்போது முக்கியத்துவத்தை கொடுத்து போட்டிகளில் விளையாட வைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தயாராக இருந்தனர்.

அப்பொழுது ராகுல் டிராவிட்-க்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் நெகட்டிவ் வரும்வரை தனிமையில் இருந்தார். அதனால் உடனடியாக வி.வி.எஸ்.லட்சுமண்-ஐ தற்காலிக பயிற்சியாளராக நியமனம் செய்தது பிசிசிஐ. ஆனால் இப்பொழுது வெளியான தகவலின் படி ராகுல் டிராவிட்-க்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் இன்னும் இரு தினங்களில் இந்திய அணியில் ராகுல் டிராவிட் இணைய போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது நிச்சியமாக இந்திய அணிக்கு மற்றுமின்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சந்தோசமான செய்தி தான். ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்-ன் காம்போ ஆசிய கோப்பையை வெல்லுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.. !