இதை நான் விராட்கோலியிடம் சொல்ல ஆசைப்படுகிறேன் ; முன்னாள் வீரர் கபில் தேவ் பேட்டி ;

ஆசிய கோப்பை போட்டி 2 : இன்று இரவு 7:30 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Kapil Dev

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பைக்கான போட்டிகளில் மொத்தம் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இந்திய அணி அதிகபட்சமாக 8 முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வென்றுள்ளனர். மீதமுள்ள ஒரு போட்டி ட்ராவில் முடிந்துள்ளது.

இந்திய அணி கம்பேக் கொடுக்குமா ?

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அதே மைதானத்தில் தான் இன்றைய போட்டியும் நடைபெற உள்ளது.

வெற்றியை கைப்பற்றுமா இந்திய ? இந்திய அணி வலுவாக இருந்தாலும், இந்த முறை வெற்றியை விட விராட்கோலி கம்பேக் கொடுக்க வேண்டுமென்று தான் அதிக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆமாம், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை விராட்கோலியால் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது.

அதுமட்டுமின்றி இறுதியாக விளையாடிய தொடர் போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. அதனால் விராட்கோலி போரம் இழந்துவிட்டார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் ” என்னை பொறுத்த வரை விராட்கோலி முடிந்தவரை இடைவேளை இல்லாமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டே இருக்க வேண்டும். விளையாடி கொண்டு இருக்கும் நேரத்தில் அதிகப்படியான பிரேக் எடுக்க கூடாது. அவர் ஒரு தலைச்சிறந்த வீரர், இந்த பிரச்சனை அவருக்கு (விராட்கோலி)க்கு இருக்க கூடாது.”

“என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் முடிந்த வரை போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். அது தான் முக்கியம். ரன்களை அடிக்க தொடங்கினால் நிச்சியமாக யோசனையில் மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார் கபில் தேவ்.”

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ப்ளேயிங் 11 ஐ பற்றி பேசிய கபில் தேவ் கூறுகையில் ; “இப்பொழுது இருக்கும் பெரிய பிரச்சனை யார் அணியில் இருப்பார் ? யார் வெளியேற்றப்படுவார் என்று தான். நாங்கள் (கபில் தேவ்) கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் பெரிய வீரர் என்றால் அணியில் இருக்க வேண்டும் ,அதேபோல விளையாடவும் வேண்டும்.”

“ஆனால் இப்பொழுது அப்படி இல்லை ரோஹித் சர்மா, விராட்கோலி, அஸ்வின் போன்ற வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் கவலை இல்லை. ஏனென்றால் சிறந்த வீரர்கள் பலர் அணியில் விளையாடி வருகின்றனர், யார் பெரிய வீரர் என்பதை விட யார் பெரிய அளவில் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது தான் முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் கபில் தேவ்.”