ஐபிஎல் போட்டியில் இது இனி இல்லை ; ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி..! முழு விவரம் ..!

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் சில நேரங்களில் புதிய விதிமுறையை பிசிசிஐ அவ்வப்பொழுது அறிவிக்கும். அதே போல இப்பொழுது இரண்டு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அதில் அவர் அடித்த பந்தை பௌண்டரி லைனுக்கு முன்னாள் தாவிய படி இங்கிலாந்து அணியின் வீரர் ஒருவர் அதனை கேட்ச் பிடித்தார்.

அப்பொழுது கள நடுவர் அதனை அவுட் என்று சொல்லிவிட்டார். அப்பொழுது டிவி நடுவரின் விடியோவை பார்க்கும் வகையில் அந்த பந்தை அவர் தரையில் பட்டு தான் கேட்ச் பிடித்தார் என்பது பார்த்த அனைவருக்கும் தெரியும். இதில் குழப்பம் அடைந்ததால் வேற வழி இல்லாமல் கள நடுவரின் முடிவே இறுதியானது. அதனால் விக்கெட்டை இழந்தார் சூர்யா குமார் யாதவ்.

போட்டி முடிந்த பின்பு கோலி அளித்த பேட்டியில் ; கள நடக்குவரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. பல விக்கெட்கள் இப்படித்தான் போயிருக்கும் அதனால் இனிவரும் போட்டிகளில் இதனை நீக்க வேண்டும், என்று இந்திய அணியின் கேப்டன் கூறியுள்ளார்.

இப்பொழுது சமீபத்தில் பிசிசிஐ புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதில் முதல் ஒன்று, எந்த ரன் அவுட் ஆக இருந்தாலும் சரி அல்லது கேட்ச் பற்றிய முழு புரிதல் இல்லாமல் கள நாட்டவரின் முடிவு ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும் டிவி நடுவரின் முடிவே இறுதியானது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இரண்டாவதாக ஷார்ட் ரன் என்ற பிரச்சனையும் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கடி நடப்பது ஒன்றுதான். அதாவது ரன்கள் ஓடும்போது கிரீஸில் பேட் பட்டு ஓடினாள் தான் ரன்கள் கணக்கில் வரும். அப்படி இல்லைனா என்றால் ரன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் இதனையும் டிவி நடுவரின் முடிவே இறுதியானது என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இந்த முடிவால் கிரிக்கெட் வீரர்களின் விக்கெட் தேவை இல்லாமல் பறிபோகாது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.