பா..! இந்த முறை இந்திய அணிக்கு தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ; அணியை அறிவித்த பிசிசிஐ ; ரசிகர்கள் வரவேற்பு :

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற ஜூன் 7ஆம் தேதி அன்று லண்டனில் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.

கடந்த முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இறுதி போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. அதில் நியூஸிலாந்து அணி வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய மீண்டும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இறுதி போட்டியில் வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த முறை எப்படியாவது போட்டியில் வெல்ல வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் அணி கடுமையான முயற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சில நிமிடங்களுக்கு முன்பு தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட போகும் இந்திய அணியின் விவரத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ரஹானே, கே.எல்.ராகுல், பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், முகமத் சிராஜ், முகமத் ஷமி, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பலம் :

கடந்த சில மாதங்களாவே இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வலுவாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் ரஹானே. அவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இடம்பெற்றது இந்திய அணிக்கு பலமாக மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி, புஜாரா, விராட்கோலி, ரஹானே போன்ற வீரர்கள் நிச்சியமாகி மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய. அதனால் இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா ? இந்திய ?