நீங்க இந்த அணியை பழிவாங்குவதற்கு தான் இப்படி விளையாடுறீங்களா ? ரஹானே கொடுத்த ஷாக் பதில் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு சென்னை அணியின் பேட்டிங் வலுவாக மாறியுள்ளது. ஆமாம், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, அதிகமுறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது சென்னை.

அதிலும் இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் அளவிற்கு சென்னை அணி வலுவாக இருக்கிறது தான் உண்மை. ருதுராஜ், டேவன் கான்வே, ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு , ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி போன்ற வீரர்களின் அதிரடியான பேட்டிங் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

அதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி ரன்களை அடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஹானே பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் “நான் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டுமென்பது தான் முக்கியம்.”

“நான் ஒவ்வொரு போட்டிகளிலும் என்னை உறுதி செய்ய ஆசைப்படுறேன். என்னுடைய இந்த அசத்தலான விளையாட்டுக்கு முக்கியமான காரணம், விளையாட வாய்ப்பு கொடுத்தது தான். என்னை சென்னை அணி தேர்வு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். சென்னை அணி என்னை விளையாட வைத்து என்னுடைய திறமையை வெளிப்படுத்த உதவியுள்ளது.”

“நீங்க நல்ல யோசித்து பாருங்க..! நான் (ரஹானே) கடந்த இரு ஆண்டுகளாக பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. போட்டிகளில் விளையாடவில்லை என்றால் எப்படி நிரூபிக்க முடியும் ??

செய்தியாளர் : அப்போ ..! இப்போ நீங்க இப்போ அட்டகாசமாக விளையாடி வருவது கொல்கத்தா அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காகவ ?

ரஹானே பதில் : “அதை நீங்க தான் முடிவு செய்யணும்….! ஆனால் எனக்கு சென்னை அணியில் சிறப்பாக விளையாட வேண்டும். மற்ற விஷயங்களை என்னுடைய பேட்டிங் பார்த்துக்கொள்ளும்.

ரஹானே இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 209 ரன்களை அடித்துள்ளார். அதிலும் அதிபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 71* ரன்களை அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here