தவான் கிடையாது ; இனி இதுதான் இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் ; மாற்றமே கிடையாது ;

0

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் உள்ள காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது.

அதனை தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரில் தொடங்க உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒருநாள் போட்டியில் மோசமான நிலையில் தோல்வியை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் ஆவது வெற்றியை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

தொடக்க வீரரை உறுதி செய்தத ? இந்திய அணி ;

கடந்த சில ஆண்டுகளாவே இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து வருகின்றனர். ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடினாலும், அவருடன் களமிறங்கி விளையாடும் வீரர் சரியாக விளையாடுகிறாரா ? என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

ஏனென்றால், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களான விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஆனால் இப்பொழுது அந்த பிரச்சனை சற்று குறைந்துவிட்டது.

ஆமாம், நேற்று முன்தினம் நடைபெற்ற பங்களாதேஷ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷான் 131 பந்தில் 210 ரன்களை அடித்து பங்களாதேஷ் அணியை திணறடித்தார். அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் பார்ட்னெர்ஷிப் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றனர்.

இஷான் கிஷனுக்கு சில மாதங்களுக்கு முன்பே தொடக்க வீரராக விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் (இஷான் கிஷான்) அதனை சரியாக பயன்படுத்தி விளையாடாத காரணத்தால் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது குறைந்தது. ஆனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷான் களமிறங்கி சிறப்பாக விளையாடியுள்ளார்.

இனிவரும் போட்டிகளில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கி விளையாடினால் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here