கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி 2020 அப்பொழுது தெடங்கிய கொரோனா பாதிப்பு இன்னும் உலகம் முழுவதும் பரவி கொண்டே இருக்கின்றது. இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 2020 முதல் பிப்ரவரி இறுதிவரை கொரோன தாக்கம் சற்று குறைவாக இருந்ததால் மக்கள் மீண்டும் அவர் அவர் வேலைகளை தொடங்கினார்.
பல கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பொழுது மீண்டும் இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று தலை தூக்க ஆரமிச்சுள்ளது. அதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகளை இந்தியா அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ சில முடிவுகள் எடுத்துள்ளது. அனைத்து வயதுகளுக்கான போட்டியை தட்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சூழ்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு எக்ஸாம் வரப்போவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.