இனி இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் !!

இதுவரை மூன்று டி-20 போட்டிகள் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் வெற்றிபெற்றுள்ளார். மூன்றாவது டி-20 போட்டி நேற்று நரேந்திர மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் முதலில் பௌலிங்கை தேர்வு சேத்தனார். முதல் டி-20 போலவே இந்தியா கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்கம் இல்லை என்றே சொல்லலாம். ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ரோஹித் சர்மா 15 ரன்களிலும் , கே.எல்.ராகுல் வழக்கம்போல ஒரு ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்கம் ஏற்படவில்லை. இரண்டாவது டி-20 போட்டியின் பொது அதிரடியாக விளையாடிய இஷான் கிஷானும் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா அணி அவ்ளோதான் என்று நினைத்த போது , கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 46 பந்தில் 76 ரன்கள் அடித்துள்ளார்.

20 ஓவர் முடிவில் இந்தியா அணி 156 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டை இழந்தது இந்தியா அணி. 157 எடுத்தாள் வெற்றி என்று களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கத்தில் சிறிது சொதப்பினாலும், ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் 52 பந்தில் 83 ரன்களை எடுத்து 18.2 ஓவரில் இந்தியா அணியை வென்றது.

இனி இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் !!

கடந்த மூன்று போட்டியிலும் இந்தியா கிரிக்கெட் அணிக்கு தொடக்கம் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை என்பதே உண்மை. முதல் போட்டியில் தவான் சரியான ஆட்டம் ஆடவில்லை, இரண்டாவது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் ஒரு ரன்கள் கூட அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனர்.

மூன்றது டி-20 போட்டியில் களம் இறங்கிய ரோஹித் சர்மா வெறும் 15 ரன்களிலும் , கே.எல்.ராகுல் ஒரு ரங்கள்கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர்கள் சொதப்பினால் பின்னாடி இருக்கும் வீரர்களுக்கு அது மிகப்பெரிய பாரம் என்றே சொல்லலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளில் விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல் .ராகுல் வெறும் ஒரு ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவர் சமூகவலைத்தளங்களில் அவர் கிண்டல் செய்து வருகின்றனர். அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம்.

ஏனென்றால் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்கிறது இந்தியா கிரிக்கெட் அணி. அதனால் வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதே நல்லது. இல்லாவிட்டால் நிச்சயமாக பல பிரச்சனை சந்திக்க வேண்டியிருக்கும்,.