நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் இந்தியா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சரியாக அணியவில்லை என்றே சொல்லலாம். இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இதே நிலைமைதான்.
கடந்த மூன்று போட்டிகளில் மூன்றாவதாக மற்றும் அதற்கு மேல் இறங்கும் வீரர்ககள் தான் இந்தியா அணிக்கு நிறைய ரணங்களை அடித்து இந்தியா அணியின் மானத்தை காப்பாற்றி உள்ளனர். முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வீரர் கே.எல் .ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவருமே சரியான ஆட்டத்தை ஆடவில்லை. ரோஹித் சர்மா 15 ரன்களிலும் மற்றும் கே.எல்.ராகுல் ஒரு ரன்கள் கூட அடிக்காமல் டக் அவுட் ஆகிவிட்டார். அதனால் இந்தியா அணிக்கு சரியான தொடக்கம் இல்லை.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 156 ரன்கள் எடுத்தனர். அதன்பின்னர் 157 எடுத்தாள் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டம் இழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றி வழிவகுத்தார். 18.3 ஓவரில் போட்டியை முடித்துவிட்டனர்.
இவரது ஆட்டத்தை நிறுத்துவது மிகவும் கடினம் ; இந்தியா அணியின் முன்னாள் வீரர் கம்பிர்
இதுவரை மூன்று டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணி இரு போட்டிகளிலும் இந்தியா அணி ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தியா அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் அளித்த பேட்டியில் ; இந்தியா அணி வீரர்களால் ஜோஸ் பட்லரை நிறுத்தவே முடியவில்லை.
முதல் போட்டியில் 28 ரன்கள் மற்றும் இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆகிவிட்டார் ஆனால் மூன்றவது போட்டியில் ஆட்டம் இழக்காமல் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை கைப்பற்றியது. இந்தியா அணியின் வீரர்களால் அவரை அவுட் செய்வே முடியவில்லை.
பும்ரா இல்லாத நேரத்தில், புவனேஷ்வர் குமார், தாக்குர்,மற்றும் ஹர்டிக் பாண்டிய மிகவும் கடினமாக போராடினார் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர். அதுமட்டுமின்றி ஐபிஎல் அணியில் இவர் ராஜஸ்தான் அணியில் கடந்த 2018 ஆம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.