வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ள இரு வீரர்கள் ; இளம் படையை உருவாக்கி வருகிறது பிசிசிஐ ;

0
Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தம் உண்டாக்கும் வகையில் இந்த மாதம் ஜூன் முழுவதும் எந்த விதமான சீரியஸ் தொடரிலும் விளையாடாமல் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் :

வருகின்ற ஜூலை 12ஆம் தேதி முதல் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற உள்ளது. அதில் இரு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 தொடர்கள் நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் முக்கியமான இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, சுப்மன் கில்,ரஹானே, ஜெய்ஸ்வால், ரூட்டுராஜ் கெய்க்வாட், பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், ஜெயதேவ் உனட்கட், ஷர்டுல் தாகூர், நவதீப் சைனி, முகேஷ் குமார்

ஒருநாள் போட்டிக்கான அணி :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், உம்ரன் மாலிக், ஜெயதேவ் உனட்கட், ஷர்டுல் தாகூர், முகேஷ் குமார், யுஸ்வேந்திர சஹால்.

இதில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் போன்ற வீரர்கள் ஐபிஎல் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பெற்றும் பல போட்டிகளில் விளையாட வாய்ப்பே கிடைத்தது இல்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன ருதுராஜ் இதுவரை ஒரு ஒருநாள் போட்டியிலும், 9 டி-20 போட்டிகளிலும், 52 ஐபிஎல் தொடரிலும் விளையாடி உள்ளார்.

அதேபோல தான் 21 வயதான ஜெய்ஸ்வால் கடந்த 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். இருப்பினும் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் அட்டகாசமாக விளையாடி ரன்களை குவித்துள்ளார்.

இதுபோன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியால் கோப்பையை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here