இவங்க இல்லைனா எப்படி உலகக்கோப்பை நன்றாக இருக்கும் ? ஒருநாள் உலகக்கோப்பை போட்டி நடைபெறுமா ? இல்லையா ?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் முதல் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் தான் அதற்கான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முறை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் அணி என்ன செய்ய போகிறது ?

இந்த ஆண்டு ஆசிய ஒருநாள் கோப்பைக்கான போட்டிகள் பாகிஸ்தான் தான் நடைபெற இருந்தது. ஆனால் தீடிரென்று இலங்கை நாட்டில் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றிருந்தால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணி பாக்கிஸ்தான் நாட்டிற்க்கு சென்றிருக்காது.

இந்திய மற்றும் பாக்கிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் இடையே மிகுந்த பரபரப்பும் உற்சாகமும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் ஆசிய கோப்பை போட்டிக்கு எப்படி இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் விளையாட வரவில்லை என்ற தகவல் சொன்னதில் இருந்து பாகிஸ்தான் அணி ஐசிசி -க்கு எதிராக திரும்பியது.

ஆமாம், நாங்கள் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான நஜாம் சேதி கூறுகையில் ; “எங்கள் கையில் ஒன்றும் கிடையாது, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்களிப்பது பாகிஸ்தான் அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.”

“பாகிஸ்தான் கிரிக்கெட் (PCB) மற்றும் இந்திய கிரிக்கெட் (BCCI) நாங்கள் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க போவதில்லை. அரசாங்கம் என்ன முடிவு செய்கிறார்களோ அதற்கு ஏற்ப தான் நாங்கள் முடிவு செய்ய முடியும். அப்படியே அரசு ஒப்புதல் கொடுத்தாலும் எங்கு விளையாட வேண்டுமென்று நாங்கள் தான் முடிவு செய்வோம்.”

“ஒருவேளை எங்கள் (பாகிஸ்தான்) வீரர்களுக்கு சரியான பாதுக்காப்பு ஐசிசி கொடுத்தால் இந்திய விளையாட வாய்ப்பு இருக்கிறது. தகுந்த பாதுகாப்பின்றி எப்படி விளையாட முடியும் ? என்று கூறியுள்ளார்.”

ஐசிசி-ன் அட்டவணை படி முதல் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோத உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.